உத்யோக் ஆதார் பதிவு செய்வதும் அதன் பயன்களும்

Blog TOP LATEST POST'S

உத்யோக் ஆதார் (Udyog Aadhar) என்பது இந்திய அரசினால் வழங்கப்பட்ட 12 இலக்கங்கள் கொண்ட தனித்துவ அடையாள எண் ஆகும். இதனை இந்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர முனைவக அமைச்சகமானது இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர முனைவகத்திற்காக வழங்கியுள்ளது.[2] மேலும் இது வணிகத்திற்கான ஆதார் எனவும் அழைக்கப்படுகிறது.[3] சூலை, 2018 அன்றைய நிலவரப்படி 48 இலட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்று நடுத்தர முனைவகங்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.[4][1]

செப்டம்பர், 2015 இல் இந்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர முனைவக அமைச்சகமானது சிறு, குறு மற்றும் நடுத்தர முனைவக அமைச்சக முன்னேற்றச் சட்டம் 2006 இன் கீழ் இந்த உத்யோக் ஆதார் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. உத்யோக் ஆதார் திட்டத்தில் பதிவு செய்வது இலவசமாகும்.[5][6]

பயன்கள்

 • வரி விலக்கு
 • நேரடி வரி சட்டங்களின் கீழ் விலக்கு
 • காப்புரிமைகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் பதிவு செய்வதற்கான கட்டணம் 50% குறைப்பு
 • கடன் உத்தரவாத திட்டம்
 • தாமதமாக செலுத்துவதிலிருந்து பாதுகாப்பு
 • குறைந்த வட்டி விகிதம் மற்றும் பொறுப்புறுதி இல்லாமல் கடன் வழங்குவது
 • அந்நிய நாடுகளில்நடக்கும் வணிக கண்காட்சிகளில் கலந்துகொள்வதற்காக இந்திய அரசிடமிருந்து நிதி உதவி
 • நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க மானியங்கள் வழங்கப்பட்டன
 • மின்சார கட்டணத்தில் சலுகை
 • அரசாங்கம் ஒப்பந்தப்புள்ளிகளுக்காக விண்ணப்பிக்கும் போது விலக்கு வழங்கப்படும்
 • சுங்கவரி பயன்கள்

பதிவு செய்யும் இணையதளம்

https://udyogaadhaar.gov.in/UA/UAM_Registration.aspx

தேவையான ஆவணம்

 • முற்றிலும் இலவசம்
 • ஆதார் கார்ட்
 • பேண் கார்ட்
 • உங்கள் தொழில் பற்றிய விவரங்கள் மற்றும் முகவரி

பதிவு செய்யும் வழிமுறைகள் வீடியோ வடிவில் :

h1ttps://youtu.be/0lT1L-C-gbg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *